உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆயுதங்களை விநியோகம் செய்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி கூறிய குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்த சீனவெளியுறவு அமைச்சரகம், ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை சீனா வழங்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
சீனாவின் நிலைப்பாடு அமைதி திரும்ப வேண்டும் என்பதுதான் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் ஏற்படுத்தி பேச்சுவார்த்தை தொடங்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.