உக்ரைனுக்கான உதவியை அமெரிக்கா குறைக்கத்திட்டம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் ரஷ்ய – உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண முயற்சிப்பதால், வெள்ளை மாளிகை உக்ரைனுக்கான இராணுவ நிதியைக் குறைக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் கூறியுள்ளார்.

உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நோக்கி ட்ரம்ப் பணியாற்றிவருகின்றார் மேலும் ரஷ்யாவுடன் இராஜதந்திர ரீதியாக மீண்டும் ஈடுபட்டுள்ளார். உக்ரைன் ஒருதலைப்பட்சமாக 2022முதல் இஸ்தான்புல் பேச்சுவார்த்தைகளை விட்டு வெளியேறிய பிறகு, ட்ரம்பின் இராஜதந்திரத்தால் மாஸ்கோவும் கியேவும் முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளன.

“அமெரிக்கா முதலில்” என்ற கொள்கையை ட்ரம்ப் நிர்வாகம் முதற்கொண்டு , உக்ரைனுக்கான உதவி உட்பட வெளிநாட்டு உதவிகளை கணிசமாகக் குறைத்துள்ளதோடு , உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு நிதியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.

இதேவேளை ட்ரம்ப் உக்ரைனுடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் . இது உக்ரைனின் கனிம வளத்தை அமெரிக்கா முன்னுரிமையாக அணுக அனுமதிக்கிறது, இது வொஷிங்டன் பைடனின் கீழ் உக்ரைனுக்கு செலவழித்த நூற்றுக்கணக்கான பில்லியன்களை திரும்பப் பெற ஒரு வழியாக இருக்கும் என்று அவர் விவரித்தார்.

இதேவேளை உக்ரைனின் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்கா வழங்கிய வான் பாதுகாப்புகளின் தொடர்ச்சியான பற்றாக்குறை மற்றும் சமீபத்திய மாதங்களில் வொஷிங்டனின் உதவி குறைந்து வருவதாக அடிக்கடி புகார் அளித்துள்ளார்.

அத்தோடு பைடனின் நிர்வாகத்தில் உக்ரைனுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 20,000 ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணைகளை ட்ரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு திருப்பி அனுப்பியதாக உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த வாரம், அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் நிர்வாகம் உக்ரைனை ஆதரித்து பைத்தியக்காரத்தனமாக பணத்தை செலவழித்ததாக குற்றம் சாட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்