ஈழத்தமிழர்கள் டூரிஸ்ட் பெமிலி படத்தை பார்த்து மகிழ்வார்கள் என்றும், அதனால் தமிழ் மொழிளை மறந்து ஆங்கிலத்தில் மூழ்கி கிடக்கின்ற 10 பேர விழித்துக்கொள்ள வழி பிறக்கும் என்று நம்புவதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், இந்த படத்தில் நடிகை சிம்ரன் அருமையாக நடித்திருப்பதாகவும் இன்றும் கதாநாயகியாக நடித்ததற்கான தகைமையை சிம்ரன் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
அத்தோடு, இந்த படத்தில் ஈழத்தமிழ் பேசும் பாத்திரத்தில் நடித்திருப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும், இடம்பெயர்ந்து வந்த ஈழத் தமிழர்களின் வலியையும் அவர்களின் வலியை மறந்து பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் பண்பையும் இந்த படம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.
உலக நாயகன் கமல்ஹாசனின் தெனாலி படத்தை அடியொற்றியே இந்த படம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.