ஈரானின் அணுசக்தி அமைப்பின் தலைவர், தனது நாட்டின் அணுசக்தி திட்டத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு அதை மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
“மீட்புக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, மேலும் அணுசக்தி திட்டத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுப்பதே எங்கள் திட்டம்” என்று அவர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.