ஈக்குவடோர் நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டின் நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும் முன்னெச்சரிக்கையாக எஸ்மரால்டாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.