இளம் பெண்களிடம் பாலியல் சேட்டை – நாவலப்பிட்டி இளைஞர்கள் இருவர் கைது!

நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றில் இளம் பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பேருந்து நடத்துனரை ​​தாக்கி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடவத்தை கிரில்லவல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் இன்று (07) காலை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரண்டு இளைஞர்களும் பேருந்தில் ஏறி, பல அருக்கைகள் முழுவதுமாக காலியாக இருந்தபோதிலும், இளம் பெண்களுக்கு அருகில் அமர்ந்து பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு நடந்து கொண்டிருந்ததை அவதானித்த பேருந்து நடத்துனர் இளைஞர்களை எச்சரித்துள்ளார். இதன் போது சந்தேக நபர்களில் ஒருவர் நடத்துனரை சிறிய கத்தியால் தாக்க முயன்றுள்ளார்.

பேருந்து, கிரில்லவல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நின்றதும், சந்தேக நபர்கள் இருவரும் வீதியில் அமைக்கப்பட்டிருந்த மரக் கம்பத்தை உடைத்து, நடத்துனரை கொடூரமாகத் தாக்கி தப்பி சென்றுள்ளனர்.

பேருந்தின் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் சந்தேக நபர்கள் இருவரையும் துரத்தி பிடித்து, கட்டி வைத்து தாக்கியுள்ளனர். பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் பொலிஸில் புகார் அளித்துள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த நடத்துனரை மருத்துவமனையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், நாளை (08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்