இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் 300 படகுகள் தரித்து விடப்பட்டுள்ளன!

அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன என வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (21) வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் கருத்துத் தெரிவிக்கும்போது,

யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது என நாம் குரல் குடுத்து வரும் நிலையில் 310 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடலட்டை பிடிப்பதற்காக 310 படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன.

ஊழலற்ற கட்சி, அரசு என கூறிக்கொண்டு வந்த NPP 310 படகுகளுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், எப்படி 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன.

அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்டுள்ள தொழில்களுக்கு இலஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிக்கும் அமைச்சு. கடல், மீன்பிடி பற்றி தெரியாத ஒருவர் அமைச்சராக இருந்துகொண்டு கடற்றொழில் பற்றி பேசுவது கிடையாது.

பாராளுமன்றில் நேற்று விவசாயம், குளங்கள், வீதிகள் பற்றி பேசும் அமைச்சர் கடற்றொழில் பற்றி பேசவே இல்லை.

உள்ளூராட்சி சபைகளை ஆட்சி செய்வதில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். இனிமேலும் ஒன்று சேராமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாள முடியாது. இதனை தமிழ்க் கட்சிகள் உணர்ந்து மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் எதிர்காலத்தில் மக்கள் இவ்வாறான கட்சிகளை நிராகரிக்க வேண்டும்.

தனித்து நிற்கும் கட்சிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ வெளிநாட்டில் இருந்து எமது உறவுகள் பணம் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு பணம் அனுப்புவதை நிறுத்தினாலே இங்கு உள்ளவர்களை வழிக்கு கொண்டுவர முடியும்.

அரசு காணி சவீகரிப்பு தொடர்பில் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது. 5985 ஏக்கர் காணிகளில் 3500 ஏக்கர் வரையான காணி வடமராட்சி கிழக்கில் காணப்படுகிறது. இக்காணிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து, கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பூர்வீகக் காணிகள் இவை.

யுத்தம் மற்றும் வேறு காரணங்களால் மக்கள் குறத்த பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். பலர் வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் இக்காணிகளை அரசுடமையாக்க அரசு முனைவதை நாம் எதிர்க்கிறோம் என தெரிவித்தார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த