இலங்கை மற்றும் வருகை தந்த சுற்றுலா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (5) பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் தொடங்க உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 77ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்படி, இலங்கை அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடர் வெற்றியை உறுதி செய்ய முடியும்.
இதேவேளை, இன்றைய போட்டியில் இலங்கை அணியில் ஒரு மாற்றம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, வேகப்பந்து வீச்சாளர் மிலன் ரத்நாயக்கவுக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லலகே பெரும்பாலும் அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.