இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவு!

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கடந்த 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் அவர்கள் இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பதவியணித் தலைமையதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த ஹெட்டியாராச்சி இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் ஏழு தசாப்தத்திற்கு மேலாகக் காணப்படும் நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்தார். இலங்கையின் 9வது பெரிய ஏற்றுமதி சந்தையாக கனடா விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சபாநாயகர், பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாட்டு சட்டமன்றங்களுக்கும் இடையில் முக்கிய பாலமாகச் செயற்படும் என்றார். இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து கனடா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட மதிப்புக்களின் ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ள இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் அமைச்சர் அநுர கருணாதிலக உரையாற்றுகையில், இரு பாராளுமன்றங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக நட்புறவு சங்கத்தின் முக்கிய பங்கை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையே ஏற்கனவே வலுவான உறவுகளை ஆழப்படுத்த அர்த்தமுள்ள உறவுகளை இதன் மூலம் மேம்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் நன்றியுரையாற்றிய நட்புறவு சங்கத்தின் சமிந்த ஹெட்டயாராச்சி, கனடாவின் நீடித்த நட்புக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இலங்கை – கனடா பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டத்திற்கு முன்னர் கௌரவ சபாநாயகருக்கும், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் சட்டவாக்க செயற்பாடுகள் குறித்து மகாணசபை, உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் தெளிவுபடுத்தல்களை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஆய்வு மையமொன்றை விரைவில் அமைக்க இருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார். அத்துடன், ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியா நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் எடுத்துக் கூறினார்.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு