இலங்கை – அமெரிக்காவுக் இடையிலான இரண்டாவது பேச்சுவார்த்தை நாளை மறுதினம்!

இலங்கை – அமெரிக்காவுக்கிடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பான கலந்துரையாடல்கள் மே 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் வொவஷிங்டன், டி.சி.யில் நடைபெற உள்ளன.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான ஒரு குழு, பேச்சுவார்த்தையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும்.

திட்டமிடப்பட்ட கூட்டங்களுக்கு முன்னதாக இந்தக் குழு அமெரிக்காவிற்குப் புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தொடர்ச்சியான இராஜதந்திர ஈடுபாடு மற்றும் பொருளாதார உரையாடலை பிரதிபலிக்கும் இரண்டாவது சுற்று விவாதம் இதுவாகும்.

சர்வதேச வர்த்தகக் கொள்கை மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

donald-trump

ஈரானால் அதன் அணு ஆயுத கட்டமைப்பை சீரமைக்க முடியாது!

கடந்த 13ம் திகதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், அணு உலைகள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், மசகு

IMG-20250624-WA0013

“பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜூலை 04 ஆம் திகதி ஆரம்பம்!

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “பிரஜாசக்தி” தேசிய

IMG-20250624-WA0012

வெலிகந்த, நெலும்வெவ வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பகுதியை அபிவிருத்தி செய்யத் திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை, வெலிகந்த நெலும்வெவ பிரதேசத்தில் உள்ள வெந்நீர் ஊற்றுகளை சூழவுள்ள பிரதேசத்தை அபிவிருத்தி