இலங்கையில் நிதி நிறுவனம் ஒன்று ஈட்டிய அதிக இலாபத்தை பதிவு செய்தது BOC!

இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொயிசா மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ் கப்ரால் ஆகியோரால் ஜனாதிபதியிடம் இந்த அறிக்கைகள் கையளிக்கப்பட்டன.

இலங்கையின் நிநி நிறுவனம் அல்லது வங்கியொன்று பெற்றுக்கொண்ட அதிகமான இலாபமாக இலங்கை வங்கி 106 பில்லியன்களை இலபமாக ஈட்டியுள்ளதென இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா இதன்போது தெரிவித்தார். இந்த இலாபம் வரி அறிவிப்புக்கு முன் பெற்றுக்கொண்டதென சுட்டிக்காட்டிய தலைவர்,வர்த்தக அபிவிருத்தி, சிறு மற்றும் மத்தியத்தர தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நிதி நிறுவனங்கள் வரிசையில் இலங்கை வங்கி முதன்மை நிலையில் இருப்பதாகவும் கூறினார்.

இதன்போது கருத்து தெரிவித்த, தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கலாநிதி ஹர்ஷ கப்ரால், 2023 ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கி பெற்றுக்கொண்ட 4.2 பில்லியன் இலாபத்தை 2024 ஆம் ஆண்டில் 26.4 பில்லியன்களாக அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

தேசிய சேமிப்பு வங்கி இந்த வெற்றியை அடைந்துகொள்வதற்கு நாட்டில் காணப்படும் பொருளாதார ஸ்திரத்தன்மையும், நிதி ஒழுக்கமுமே காரணமாக அமைந்ததென சுட்டிக்காட்டிய ஹர்ஷ கப்ரால், அரச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கும் திறைசேரிக்கும் பாராமாக இல்லாமல் முறையான முகாமைத்துவத்தின் கீழ் இலாபத்தை ஈட்டும் நிலைக்கு மாற முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும் என்றும் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டிலும் இதனை மிஞ்சிய வெற்றியை அடைந்துகொள்ள தேசிய சேமிப்பு வங்கி எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இரு அரச வங்கிகள் என்ற வகையில் இலங்கை வங்கியும் தேசிய சேமிப்பு வங்கியும் குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்டிருக்கும் இந்த வெற்றியை பாராட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மூலோபாய தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் முறையான முகாமைத்துவத்தின் மூலம் அரச நிறுவனங்களை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னேற்றகரமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும், இந்த வங்கிகள் அடைந்திருக்கும் முன்னேற்றம் அதனை நன்றாக பிரதிபலிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

2025 ஆம் ஆண்டில் இலங்கை வங்கியும் தேசிய சேமிப்பு வங்கியும் தங்களது டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நுகர்வோர் சேவைகளை பலப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் தலைவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த