பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவீசி அழித்துள்ளனர்.
குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளான அடில் உசேன் தோக்கர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய இருவரின் வீடுகள் ஜம்மு காஷ்மீரில் நடந்த தனித்தனி குண்டுவெடிப்புகளில் நேற்று இரவு (24) அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை அவர்களின் வீடுகளுக்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அடில் உசேன் தோக்கர் அனந்த்நாக் மாவட்டத்தையும், ஆசிப் ஷேக் புல்வாமாவையும் சேர்ந்தவர்கள். ஹாஷிம் மூசா என்கிற சுலேமான் மற்றும் அலி பாய் என்கிற தல்ஹா பாய் ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு இந்திய மதிப்புப்படி ரூ.20 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.