கனடாவில் நேற்று நடந்த 45ஆவது பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பியர் பொலிவர் தனது தொகுதியில் தோல்வியடைந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
ஒட்டாவா பகுதியில் உள்ள கார்லெட்டன் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலிவர் தனது 20 ஆண்டுகால எம்.பி. பதவியை இழந்துள்ளார்.
குறித்த தொகுதியில் போட்டியிட்ட லிபரல் கட்சியின் வேட்பாளர் 3,793 மேலதிக வாக்குகளினால் பியர் பொலிவரை தோற்கடித்துள்ளார்.
இந்த நிலையில், கனடா தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி சிறுபான்மை அரசு அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.