இராட்சத இராட்டினத்தில் கோளாறு – சிக்கித் தவித்த நிலையில் மக்கள் மீட்பு!

இந்தியாவின் சென்னையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் இராட்சத இராட்டினம் பழுதாகியதில் அதிலிருந்த மக்கள் பல மணிநேரம் சிக்கித் தவித்த நிலையில் மீட்கப்பட்டனர்.

குறித்த இராட்சச இராட்டினத்தில் 35 நபர்கள் ஏறி அமர்ந்து சுற்றியுள்ளனர். அப்போது இராட்டினம் பழுதாகி செங்குத்தாக சுமார் 150 அடியில் நின்றது. இதனால் அதில் இருந்த 35 நபர்களும் கீழே இறங்க முடியாமல் சுமார் 3 மணி நேரம் சிக்கி தவித்தனர்.

பூங்கா நிர்வாகத்தினர் இராட்சத இராட்டினத்தில் ஏற்பட்ட பழுதை நீக்க முடியாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இராட்சத மின்தூக்கிகள் மூலம் சென்று 35 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர்,

மேலும் அங்கிருந்த மக்களும், இராட்சத இராட்டினம் பழுதாகி நின்றவுடன் பூங்கா நிர்வாகம் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொலிஸாரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க