ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 59ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் – பஞ்சாப் மோத உள்ளன.
இதையடுத்து இரவு 7.30 மணிக்கு 60ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில், டெல்லி கெப்பிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லியில் நடைபெற்றும் இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன.
குஜராத் அணியின் பிளே ஓப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், பிளே ஓப் சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டி டெல்லிக்கு மிகவும் முக்கியமானதாகும்.