இனத்துவேச அரசாங்கம்! – கருணா அம்மான் சாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சி விட்டுக் கொடுப்புடன் மக்கள் சார்ந்து தீர்மானம் எடுக்குமாகவிருந்தால் மட்டக்களப்பில் குறைந்தது 10 சபைகளில் எந்த பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு, ஏனைய இனத்தவர்களின் ஆதரவு இல்லாமல் தனித் தமிழ் உறுப்பினர்களாக ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. கட்சிக் கொள்கைகளுக்கு அப்பால் மக்களை முன்நிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சிகளின் கொள்கைகளும் தமிழ் மக்களின் நலனை நோக்காகக் கொண்டே அமைகின்றன என முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் இணைத்தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விடயங்கள் மற்றும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே மட்டக்களப்பில் கிட்டத்தட்ட 37 ஆசனங்களை கிழக்குத் தமிழர் கூட்டமைப்பாக நாங்கள் பெற்றிருக்கின்றோம். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்பதை நாங்கள் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருதி, கிழக்கு மாகாணத்தைத் தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே உருவாக்கினோம். அந்த நோக்கத்தின் முதற்கட்டமாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் நாங்கள் போட்டியிட்டு அதனூடாக தற்போது 37 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம்.

இத்தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்றது. இதில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் பேச வருவார்களாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்திலே குறைந்தது பத்து சபைகளில் எந்த பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு, ஏனைய இனத்தவர்களின் ஆதரவு இல்லாமல் தனித் தமிழ் உறுப்பினர்களாக ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. இது தொடர்பான விடயங்கள் எமது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஜெயம் அவர்களிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளூராட்சி மன்ற ஆட்சி அதிகாரங்கள் தொடர்பில் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

எங்களைப் பொறுத்தவரையில், என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடும் தமிழர்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதேயாகும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் முன்வருவார்களாக இருந்தால் நாங்கள் மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயார்.

இதில் கட்சிக் கொள்கைகளுக்கு அப்பால் மக்களை முன்நிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளும் தமிழ் மக்களின் நலனை நோக்காகக் கொண்டே தமது கொள்கைகளை வகுக்கின்றன. அந்த அடிப்படையில் நாங்களும் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனித் தமிழ் கட்சி, இந்த நாட்டிலே தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எங்களின் கொள்கையுமாகும். அதே போன்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையும் வகுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை வகுத்ததிலே நானும் ஒருவன்.

எனவே இங்கு கொள்கை ரீதியில் முரண்பாடுகள் வருவதற்குப் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. அதை அவர்கள் தான் விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு பாரிய அச்சம் இருக்கின்றது. அவர்கள் வடக்கு கிழக்கிலே பாரிய சரிவைச் சந்தித்துக் கொண்டு வருகின்றார்கள். பதவிப் போட்டிகள், பொறாமைகள், ஆசைகள் எல்லாம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் தற்போது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் இதில் அவர்கள் தான் முடிவை எடுக்க வேண்டும்.

இதிலே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தேசியம் தேசியம் என்று பேசிக்கொண்டு முஸ்லிம்களுடன் சேர்ந்தோ அல்லது தேசிய மக்கள் சக்தியுடன் சேர்ந்தோ ஆட்சியமைப்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு இனத்துவேசம் பிடித்த அரசாங்கம் என்பதை அனைவரும் தற்போது அறிந்திருக்கின்றார்கள். இதனை நான் ஆரம்ப காலம் முதலே சொல்லி வந்திருக்கின்றேன். தற்போது அவர்கள் அவர்களின் முகத்தைக் காட்டத் தொடங்கி விட்டார்கள்.

இதே போன்றே கிழக்கு மாகாண சபையிலும் தமிழர்களாகச் சேர்ந்து நாங்கள் போட்டியிட வேண்டும். இது தொடர்பான அழைப்பை நாங்கள் அனைத்து தரப்பினருக்கும் விட்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குள் சுமந்திரன், சாணக்கியன் போன்றவர்கள் உள்நுழைந்ததன் பிற்பாடு இந்தக் கட்சியை வளர்த்தவர்களையெல்லாம் அவர்கள் வெளியிலே விட்டுவிட்டார்கள்.

பொதுவாகப் போராட்ட களங்களிலே நின்ற செல்வம் அடைக்கலநாதன், ஜனா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற உறுப்பினர்களையெல்லாம் புறந்தள்ளி விட்டார்கள். எனவே அவர்களையெல்லாம் நாங்கள் அழைக்க வேண்டும். ஒற்றுமையாக நின்று போட்டியிட வேண்டும். ஏனெனில் தற்போது ஒரு செய்தியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லாவை நிறுத்துவதற்கு தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. எனவே கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம்கள் இதில் தீவிரமாக இருக்கின்றார்கள்.

கடந்த முறை உங்களுக்குத் தெரியும் 11 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸிடம் ஆட்சியை ஒப்படைத்து கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்குப் பாரிய துரோகம் இளைத்தவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்த நிலைமை வராமல் நாங்கள் அனைவருடனும் பேசி கிழக்கு மாகாணத்தைத் தனித் தமிழர் ஒருவர் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு