இந்த வருடத்தில் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

ஊடகவிலாளர் சந்திப்பில் இன்று திங்கட்கிழமை கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தூண்டுதலால் நடந்தவை.

இந்த சம்பவங்கள் தொடர்பில் 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 41 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றில் 27 பிஸ்டல் வகை துப்பாக்கிகள். மீதமுள்ள 14 துப்பாக்கிகள் , டி-56 ரக துப்பாக்கிகள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

1750511377-accsident-600

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பஸ் விபத்து மூவர் உயிரிழப்பு

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த நான்காம் கட்டை பிரதேசத்தில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் மூன்று

402451

முதல் டெஸ்டில் பங்களாதேஷ் ஆதிக்கம் – சமநிலையில் முடிந்தது போட்டி!

காலியில் நடைபெற்று வந்த சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

IMG-20250621-WA0004

பணம், அதிகாரத்தினால் வாழ்விழந்தோருக்கு பௌத்தத்தின் மூலம் ஆன்மிக வாழ்வை அளிக்க முடியும்!

குருநாகல் வரலாற்று சிறப்புமிக்க ஹஸ்திசைலபுர எத்கந்த ரஜ மகா விஹாரையில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஸ்ரீ தலதா பொசொன்