இந்திய அரசின் இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், இலங்கைக்கு பாரிய அளவிலான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிதி அமைச்சரான நிர்மலா சீத்தாராமன், கடந்த நாளை பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
அவரின் அறிவிப்பின் படி, இலங்கைக்கு வழங்கப்படும் உதவியில் எந்தவித மாற்றமும் இல்லாமல், 2025 ஆம் ஆண்டிற்கான இந்திய வரவு செலவு திட்டத்தில், முந்தைய ஆண்டுகளைப் போலவே 300 கோடி இந்திய ரூபா இலங்கையுடனான பொருளாதார நட்புறவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு, இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதை நினைவுகூர்ந்த சீத்தாராமன், தற்பொழுது இலங்கை நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாகவும், அதற்கான முழு ஒத்துழைப்பு இந்தியாவிலிருந்து தொடரும் எனவும் தெரிவித்தார்.