இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மே 7-ஆம் திகதி மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது இந்திய மத்திய உட்துறை அமைச்சரகம் தரப்பிலிருந்து இன்று ( 5) அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மே 7-ஆம் திகதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குரியவாறு ஒத்திகை நடத்தப்பட வேண்டும்.
அப்போது முக்கியமாக கீழ்காணும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,
வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டால் உடனடியாக அபாய ஒலி சமிக்ஞைகளை ஒலிக்கச் செய்தல். மக்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி அளித்தல்.
இந்த பயிற்சியானது மக்களது பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒருவேளை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அப்போது தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வது எப்படி என்பதையும் பயிற்சியின்போது விளக்க வேண்டும்.என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.