ஜேர்மன் படைகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையே 1940 – 1945 களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் ஜேர்மன் படைகள் சரணடைந்தன. இதனை கொண்டாடும் வகையில் ரஷ்யாவில் வெற்றி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் ரஷ்யாவில் வருகின்ற மே 9 ஆம் திகதி 80 ஆம் ஆண்டு வெற்றி விழா நடைபெறவுள்ளது. இந்த வெற்றி விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ரஷ்ய வெற்றி நாள் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி சார்பாக மத்திய அமைச்சர் ஒருவர் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக, சவுதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாதியில் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியிருந்தார்.
தற்போது இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில் ரஷ்யப் பயணத்தை மோடி தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.