இந்திய படையினரின் தாக்குதல் சூத்திரத்தை மெச்சுகிறேன் – ராகுல் காந்தி

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உட்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல்களை ஆரம்பித்துள்ள இந்திய இராணுவத்தை, காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.

எங்கள் ஆயுதப் படைகளைப் பற்றி பெருமைப்படுகிறேன், ஜெய் ஹிந்த் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, எவரேனும் இந்திய குடிமக்களை அச்சுறுத்தினால் அவர்கள் அதே விதியை சந்திப்பார்கள் என
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.

தங்கள் இராணுவம் அதனை மீண்டும் நிரூபித்துள்ளது எனவும் அவர் பெருமிதமடைந்தார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

”பயங்கரவாதத்துக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம் என்று நாங்கள் உறுதியளித்திருந்தோம்.

எவரேனும் இந்தியாவை அச்சுறுத்தினால், அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்திற்கு நாம் ஆதரிப்போம். நாடு ஒற்றுமையாக உள்ளது” என்றார்.

இதேவேளை, ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ஆயுதப் படைகளின் சாதனையை காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மல்லிகார்ஜுன் கார்கே பாராட்டியுள்ளார்.

தேசிய ஒற்றுமையே காலத்தின் தேவை என்றும் 26 பேரின் உயிரைப் பறித்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

download

அரசாங்கத்தை விமர்சித்தால் ஊழல்வாதிகளுக்கு வலு கிட்டும்!

உலகில் உள்ள 147 நாடுகளில், உலகின் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 133வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக பீல்ட் மார்ஷல்

point

பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது தமிழ்பேரவை!

பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளரை தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பு

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்