இந்தியா- பாகிஸ்தான் போர் மூளும் அபாயம்!

பஹல்காமில் கடந்த 22 ஆம் திகதி தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதேவேளை நேற்று (29) இராணுவ தளபதிகளிடம் ஆலோசனை நடத்திய இந்திய பிரதமர் மோடி, பதிலடி கொடுக்க இராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்தார் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலைத் திட்டமிடுவதாக தங்கள் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து இந்தியா ஜோடிக்கப்பட்ட மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த இந்தக் கூற்றுக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுதான் என்றும், இந்தியாவின் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான நிபுணர் ஆணையகம் மூலம் நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பதாக கூறியபோதிலும், இந்தியா மோதல் பாதையைத் தேர்வு செய்கிறது என்று அவர் கூறினார்.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த