கர்நாடக மாநிலத்தில் தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்கிறார்
இந்த விழாவில் ரணில் விக்கிரமசிங்கே முக்கிய உரையாற்றுவார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் நிறைவுற்றதன் பின்னர் அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இரு தினங்களுக்கு அவர் இந்தியாவில் தங்கியிருப்பார் என அவரது அலுவலகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.