இந்தியா – நாளை போர்க்கால ஒத்திகை!

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சு நேற்று (05) உத்தரவிட்டது.

மேலும், இந்த ஒத்திகையை நாளை (07) நடத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக மத்திய அரசின் உயா்நிலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக பாகிஸ்தானையொட்டிய சா்வதேச எல்லையை இணைக்கும் இந்திய எல்லை மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக், ஜம்மு – காஷ்மீா் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய உள்துறையில் இருந்து சனிக்கிழமை மாலையில் அனுப்பப்பட்டுள்ள குறிப்பில், பாதுகாப்பு ஒத்திகையின்போது என்னன்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி, வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல்; அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என சிவில் பாதுகாப்பு அமைப்புகள், பொதுமக்கள், மாணவா்கள், தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு உரிய பயிற்சி அளித்தல்; தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இராணுவம், பாதுகாப்பு தளவாடங்கள் உள்ள இடங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், அணுஉலை மற்றும் ஈனுலை மையங்கள், உள்ளிட்ட முக்கிய இடங்கள் அந்நிய படைகளின் இலக்காகலாம் என்பதால் அவை அந்நிய ராடாரில் இருந்து தெரியாமல் தடுக்க தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மறைத்தல்; தாக்குதல் நடப்பதாகவோ தாக்குதல் நடந்தாலோ அங்குள்ளவா்களை பாதுகாப்பாக வெளியேற்றத் திட்டம் 1,2,3 ஆகியவற்றை தயாரித்தல்; மக்களை பத்திரமான இடத்துக்கு அழைத்துச்செல்லுதல், அதற்கு தேவையான தளவாட வசதிகள், மருத்துவமனை வசதிகள் உள்ளிட்டவற்றை தயாா்நிலையில் வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளை பாதுகாப்பு ஒத்திகையின் அங்கமாக செயல்படுத்துமாறு மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தீவிர பதற்றம்

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். அதற்குப் பிறகு ஜம்மு – காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை பிடிக்க தொடா்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதற்கிடையே, அனைத்து நட்புறவு அடிப்படையிலான வா்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு உறவுகளை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் முறித்துக் கொண்டுள்ளன. திபெத்தில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை முழுமையாக நிறுத்தும் நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்துள்ளது.

பயங்கரவாதத்தை தனது சொந்த மண்ணில் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்துமாறு இந்தியா விடுத்த எச்சரிக்கைக்குப் பிறகும் மும்பை தாக்குதலில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி ஹஃபீஸ் சையது உள்ளிட்டோருக்கு வழங்கும் பாதுகாப்பை பாகிஸ்தான் பலப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வாரத்தில் இரு முறை தொலைதூர ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அத்துடன் எல்லைச்சாவடிகளில் (பாா்டா் செக்-போஸ்ட்) அதிகளவிலான படைகளை போருக்குத் தயாராவது போல குவித்து வருகிறது. இரு நாடுகளும் ஏற்கெனவே அவற்றில் வசித்து வந்த இரு நாட்டு குடிமக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளன.

எந்நேரமும் தாக்குதல்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (பிஓகே) எல்லை கிராமங்களில் இருப்பதாக கருதப்படும் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்களில் இந்தியா எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக ஏற்கெனவே பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

ஆனால், அந்தத் தாக்குதல் எங்கு, எப்போது, எவ்வாறு நடத்தப்படும் என்பதை மத்திய அரசு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. இதன் முன்னோட்டமாக மக்களைத் தயாா்படுத்தும் வகையிலேயே திங்கள்கிழமை பாதுகாப்பு ஒத்திகை உத்தரவை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

Modi (1)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப்

495270405_919110200343581_3972143963487025502_n

கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!

எகொட உயன பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்று மீள கரைக்குத் திரும்பிய மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு

btOCP9w

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான பொறிமுறை குறித்து கலந்துரையாடல்!

இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு ஏதுவான பொறிமுறையை உருவாக்கும் வகையிலான கொள்கை ஆவண வரைவு தயாரிக்கப்பட்டு