இந்தியாவின் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தன்னிச்சையாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே இன்று காலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் இந்தியாவின் 15 இடங்களில் உள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.
அதேவேளையில் இந்தியா பாகிஸ்தானை நோக்கி ட்ரோன்களை செலுத்தியது. இந்த ட்ரோன்கள் லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற இடங்களை தாக்கியது. இதில் லாகூர் வான் பாதுகாப்பு சிஸ்டம் தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் 25 ட்ரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகத் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 25 ஹெரோப் ட்ரோன்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் இருந்து ட்ரோன்களின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.