இத்தாலி கடற்பகுதி அருகே கைவிடப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்றிலிருந்து 54 அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த படகிலிருந்தவர்கள் லிபியாவில் இருந்து சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயன்றபோது படகு பழுதானதால் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த கப்பலை சோதனை செய்த கடற்படையினர் சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்குத் தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.