இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கனடா சுற்றுப்பயணம்!

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி கமீலாவுடன் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் கனடா சென்ற அவருக்கு, தலைநகர் ஒட்டாவாவில் அந்த நாட்டின் புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு கனடா நாட்டின் புகழ்பெற்ற ஐஸ் ஹாக்கி வீரர் கிறிஸ் பிலிப்ஸை மன்னர் சார்லஸ் சந்தித்தார். தொடர்ந்து லேண்ட்ஸ் டவுன் பூங்காவில் உள்ளூர் வியாபாரிகளை மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் கனடா ஆளுனர் ஜெனரலின் அதிகாரப்பூர்வ இல்லமான ரிடியூ ஹாலில் இருவரும் மரக்கன்று நட்டனர்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது மன்னர் சார்லஸ் கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது கனடா மீதான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தப்படவுள்ளது.

download (15)

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் – ஐ.நா ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது

download (14)

ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத்

donald-trump

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன – ட்ரம்ப்!

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த அறிவிப்பை மீறிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேவேளை ஈரான் தனது அணு