தற்போதைய அரசாங்கம் வாக்களித்த மக்களை மறந்து விட்டு தனது கட்சிக்கே பொறுப்புக்கூறல் மற்றும் விசுவாசமாக இருப்பதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இது குறித்து மேலும் கூறிய அவர்,
ஜனநாயக கட்சிகளைப் பொறுத்த வரை கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும், வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இருப்பதே நியாயமானது என அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 159 உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்களிடையில் சிறந்த கருத்து பரிமாற்றம் இல்லை எனவும் தெரிவித்தார்.