ஆர்ஜென்டினாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றத்திற்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பொதுப் பதவியிலிருப்பதற்கான வாழ்நாள் தடை விதித்து ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2007-2015 வரை இரு தடவை அவரது பதவிக்காலத்தில் வீதிக் கட்டுமான ஒப்பந்தங்களை தமக்கு சாதகமான நிறுவனமொன்றுக்கு வழங்கிய மோசடியில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டினடிப்படையில் 2022 இல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து கிர்ச்னரும் அவரது வழக்கறிஞர்களும் குறித்த வழக்கிற்கு எதிராக ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதேவேளை இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்த ஆர்ஜென்டினா உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து கிறிஸ்டினா பெர்னாண்டஸ்டி கிர்ச்னருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பொதுப் பதவியிலிருப்பதற்கான வாழ்நாள் தடை விதித்து நேற்று (10) தீர்ப்பளித்துள்ளது.