ஆசை மிகுதியில் மனைவியின் மூக்கை கடித்த கணவன்!

மனைவியின் மூக்கை கணவன் கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் பெர்பாரா பகுதியில் 35 வயதுடைய பாபன் ஷேக் என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக மது கதுன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தம்பதிகளுக்கு 8 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பாபன் ஷேக் அடிக்கடி போதையில் வந்து தன்னுடைய மனைவியின் அழகை வர்ணித்துள்ளார்.

குறிப்பாக தன் மனைவியின் மூக்கு அழகாக இருப்பதாகவும் ஒரு நாள் அதை கடித்து சாப்பிட்டு விடுவேன் என அடிக்கடி கூறியுள்ளார். சம்பவ நாளில் வழக்கம்போல் போதையில் வந்த பாபன் திடீரென அவருடைய மனைவியின் மூக்கை கடித்து மென்று சாப்பிட்டுள்ளார்.

வலியால் அலறி துடித்த கதுன் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் வீட்டை விட்டு ஓடியுள்ளார். பின்னர் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகு தன் தாயாருடன் சேர்ந்து பொலிஸ் நிலையத்தில் கணவன் மீது புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் படி பாபன் ஷேக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க