அமெரிக்காவுக்கு வீதி மார்க்கமாக சுற்றுலா செல்லும் கனேடியர்கள் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்திலிருந்து 35.2 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதேவேளை ஆகாய மார்க்கமாக அமெரிக்கா செல்லும் கனேடியர்களின் எண்ணிக்கையும் 20 சதவிகிதம் குறைந்துள்ளது.
கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிப்பதன் விளைவை அமெரிக்கா அனுபவிக்கத் தொடங்கிவிட்டதாக பயண நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்க விமான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் எல்லையிலுள்ள கடைகளுக்கு கனேடிய டொலர்கள் வடிவில் வரும் வருவாய் பெருமளவில் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதே நேரத்தில், கனடாவின் சுற்றுலாத்துறைக்கு வருமானம் கணிசமாக அதிகரித்துவருகிறது.
2020க்கு முன், அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதில் முக்கிய இடம் பிடித்தவர்கள் கனேடியர்கள் என்ற நிலை இருந்தது. ஆகவே, தற்போது கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிப்பதால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அமெரிக்கர்களால் நன்கு உணர முடிகிறது.
இதேவேளை கனேடியர்களின் அமெரிக்க புறக்கணிப்பு, நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடும் என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள்.