அமெரிக்கா உக்ரைன் இடையே கனிம ஒப்பந்தம் கைச்சாத்து!

அமெரிக்காவும் உக்ரைனும் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசெட் மற்றும் உக்ரைன் துணைப் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்கா உக்ரைனின் மதிப்புமிக்க அரிய பூமி தாதுக்களான டைட்டானியம், யுரேனியம் மற்றும் லித்தியம் ஆகியவற்றை பெற அனுமதிக்கும்.

உக்ரைன் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடர விரும்பினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு உக்ரைனை அமெரிக்கா நிர்பந்தித்து வந்தது.

உக்ரைன் தொடர்ந்து அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது.

இந்நிலையில் அமெரிக்கா – உக்ரைன் இடையே கனிம ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்கா அதிக வரிவிதித்ததால் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இதனால் உக்ரைனுடனான கனிம ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

84ca9306-5935-4aaa-8a83-08c076263201

மக்களை ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச வேண்டுகோள்!

தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும்

IMG-20250613-WA0010

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன்

2715cd82-e202-4613-a251-7a1a90612914

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஜனாதிபதியின் தலைமையில்!

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க