4 மில்லியன் ரூபாய் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எம்.அதுல திலகரத்ன என்பவர் வெசாக் போயா தினத்தில் இருந்து பத்து நாட்களுக்குப் பிறகு அதாவது மே.2 அன்று விடுவிக்கப்பட்ட விவகாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அனுராதபுரம் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் மோகன் கருணாரத்ன கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இடைநீக்கம் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், துஷார உப்புல்தெனியவின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை தேடி பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எனினும், அவர், விடுவிக்கப்பட்ட இரண்டொரு நாளிலேயே நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.