அணுசக்தி ஒப்பந்தம் குறித்து 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை ரோமில்!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா, ஈரான் இடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை ரோமில் நடந்தது. கடந்த 2015இல் அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான் அதிகளவில் யுரேனியத்தை செறிவூட்டுவதாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி உள்ளது.

ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் மூலம் பல அணு ஆயுதங்களை உருவாக்க முடியும். இதை தடுக்கும் வகையில் யுரேனியம் செறிவூட்டலை முழுமையாக கட்டுப்படுத்த அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும், இல்லாவிட்டால் ஈரான் மீது இதுவரை நடந்திராத வகையில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை ஓமன் நாட்டில் கடந்த வாரம் தொடங்கப்பட்டது.

நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்காததால் இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய ஓமன் நாடும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. ஓமனில் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் நேற்று (19) 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அங்குள்ள ஓமன் தூதரகத்தில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஒப்பந்தம் இறுதியாகும் என தெரிகிறது. முன்னதாக, ஓமன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உடனடியாக மாஸ்கோ சென்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து விளக்கம் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1750702229792

அமெரிக்க தளங்கள் மீது ஆறு ஏவுகணைகள்!

கட்டாரில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஆறு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் அறிவித்ததுள்ளது. மறுமுனையில் அந்த தாக்குதல்களை

articles_d4nRSI0QNktHIOJ3rvu6

பிரதமரை சந்தித்த ஐ. நா. ஆணையாளர்!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) நாட்டுக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

articles_kGgzoYim6dGg5oZcL72a

நட்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் – ஈரான் உறுதி!

அல்-உதெய்த் தளத்தின் மீதான தாக்குதல் அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ‘நட்பு நாடான கத்தார் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு’ எந்த